அனைத்து இணையவழி தமிழ் படிப்புகள்
எமது இணையவழி தமிழ் படிப்புகள், பாடத் திட்டங்கள், பாடங்கள் அனைத்தும் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் என அனைவருக்கும் பொதுவானவை.
இணையவழியில் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்
எமது தமிழ் பாடங்கள்
எங்களின் அனைத்து தமிழ் பாடங்களும் ACTFL மற்றும் CEFR போன்ற உலக மொழி கற்றலுக்கான தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நிலை K1
எளிய வழியில் தமிழ் எழுத, படிக்கக் கற்றல் - எளிதான வடிவ, ஒலி ஒற்றுமையிலான முறையைப் பயன்படுத்தி தமிழ் எழுத்துக்களை அறிமுகம் செய்தல்.
நிலை K2
எளிமையான பயன்பாட்டுத் தமிழ் - தமிழ் கற்றலில் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல தேவையான அடிப்படைப் பயன்பாட்டுத் தமிழ் கற்றல்.
நிலை K3
அடிப்படைத் தமிழ் 101 கற்றல் - இந்த படிப்பின் உள்ளடக்கமானது ACTFL தரநிலைகளில் novice-low நிலையை அடிப்படையாகக் கொண்டது.
நிலை K4
அடிப்படைத் தமிழ் 102 கற்றல் - இந்த படிப்பின் உள்ளடக்கமானது ACTFL தரநிலைகளில் novice-mid நிலையை அடிப்படையாகக் கொண்டது.
நிலை K5
அடிப்படைத் தமிழ் 103 கற்றல் - இந்த படிப்பின் உள்ளடக்கமானது ACTFL தரநிலைகளில் novice-high நிலையை அடிப்படையாகக் கொண்டது.
நிலை S1
எளிமையான பேச்சுத்தமிழ் கற்றல் - எளிமையான சொற்றொடர்களுடன் கூடிய தமிழ் உரையாடலுக்குத் தேவையானவற்றை அறிமுகம் செய்தல்.
நிலை S2
மேம்பட்ட பேச்சுத் தமிழைக் கற்றல் - மேம்பட்ட அளவில் தமிழ் உரையாடலை நிகழ்த்துவதற்குத் தேவையானவற்றைக் கற்றல்.
நிலை K6
இடைநிலை தமிழ் 201 கற்றல் - இந்த படிப்பின் உள்ளடக்கமானது ACTFL தரநிலைகளில் intermediate-low நிலையை அடிப்படையாகக் கொண்டது.
நிலை K7
இடைநிலை தமிழ் 202 கற்றல் - இந்த படிப்பின் உள்ளடக்கமானது ACTFL தரநிலைகளில் intermediate-mid நிலையை அடிப்படையாகக் கொண்டது.
நிலை K8
இடைநிலை தமிழ் 203 கற்றல் - இந்த படிப்பின் உள்ளடக்கமானது ACTFL தரநிலைகளில் intermediate-high நிலையை அடிப்படையாகக் கொண்டது.
அமெரிக்க உயர்நிலைப் பள்ளி மாணவர்களே, தமிழ் மொழியைக் கற்பதன் மூலம் உலக மொழிக்கான மதிப்பீட்டுப் புள்ளிகளை பெறுங்கள்
உலக மொழி மதிப்பீட்டு புள்ளிகளை வழங்கும் தேர்வு முறைகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் தமிழ் படிப்புகளை நாங்கள் வழங்குகிறோம்.

கருத்து விளங்கல் முறை
கருத்து விளங்கல் முறை மாணாக்கர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் அவர்கள் பார்ப்பதை, படிப்பதை, கேட்பதை எவ்வாறு விளங்கிக் கொள்ளலாம் என்பதை விவரிக்கிறது.
கருத்து விளக்கல் முறை
கருத்து விளக்கல் முறை மாணாக்கர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் அவர்கள் பேசுதல், எழுதுதல், உடல்மொழி மூலம் எவ்வாறு விளக்கி தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்பதை விவரிக்கிறது.
கருத்து வெளிப்படுத்துதல் முறை
கருத்து வெளிப்படுத்துதல் முறை மாணாக்கர்கள் பல்வேறு வகையான பார்வையாளர்களிடம் ( சிறிய குழு அல்லது முகப்பெரிய அரங்கம்) பேசுதல், எழுதுதல் மூலம் எவ்வாறு தங்கள் கருதுக்களை வெளிபடுத்தலாம் என்பதை விவரிக்கிறது.
எங்கள் மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்?
எங்கள் செய்திமடலுக்கான குழுவில் இணையவும்
எங்கள் செய்திமடல் குழுவிற்கு வரவேற்கிறோம். கணியன் தமிழ் அகாடமியின் செய்திகளை உடனக்குடன் மின்னஞ்சலில் பெற கீழே உள்ள படிவத்தில் பதிவு செய்யவும்.