தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பல்லூடக ஒலிஒளிப் பதிவுகள் கொண்ட அதன் இணைய பக்கங்களைக் காண்பதில் சிக்கல் இருந்து வந்தது. அந்தச் சிக்கலுக்குக் காரணம் அடோப் நிறுவனத்தின் காலாவதியான தொழில்நுட்பமான Flash தரவுகளைப் பார்ப்பதற்கான வசதிகளைச் சில வருடங்களாகவே உலாவிகள் நிறுத்திக் கொண்டமையே ஆகும்.
இருந்தாலும் ஆயிரக்காணக்கான பல்லூடக இணையப் பக்கங்கள் அதைக் கொண்டே கடந்த 20 வருடங்களாக உருவாக்கப்பட்டிருந்தன. தமிழ் இணையக் கல்விக்கழகமும் பல்வேறு பாடங்களுக்கான பல்லூடகப் பக்கங்களை அதைக் கொண்டே உருவாக்கி வழங்கி இருந்தது. அந்தச் சிக்கலை எப்படி சரி செய்து அதன் இணையப் பக்கங்களைக் காணலாம் என்பதை இக்காணொலியில் பார்ப்போம்.