World Tamil Diaspora Day – 2022
Commissionerate of Rehabilitation and Welfare of Non Resident Tamils - Tamilnadu Government conducts World Tamil Diaspora Day - 2022
தமிழால் இணைவோம்
ஆழி சூழ் அண்டத்தில், பேரேழு கண்டத்தில்,
திரவியம் தேடும் தமிழ் இனமே, நீவீர் சென்ற இடமெல்லாம்
அடர் வனங்களும் சோலையாச்சு . பாலையும் சீர்மிகு தேசமாச்சு, ..
வெற்றி உங்கள் வசமாச்சு,
நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர், எனில்
தமிழர்களே, நீவீர் இன்றி ஏது இந்த உலகு,
உலகத்தமிழர்களின் ஒன்று கூடல் – ஆம்,
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் அறிவிப்பு,
ஆண்டுதோறும் தமிழினத்தின் ஒன்று கூடல்,
களிப்பதற்கு மட்டுமின்றி வாழ்க்கை செழிப்பதற்கும்,
இம்முறை சிங்கார சென்னையிலே சங்கமிப்போம்,
சங்கநாதம் இசைப்போம்,
நிகழ்வுகள்
- “புலம் பெயர் தமிழர் நல வாரியம்” மற்றும் “24*7” இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி உதவி மையம் துவக்கி வைத்தல்.
- உள்ளுர் மற்றும் புலம்பெயர்ந்த உலகத்தமிழர்களிடையே (தொழில் முனைவோர்) இணைப்புகளை ஏற்படுத்துதல்.
- புலம் பெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு பாதுகாப்பான முதலீடு தொடர்பான ஆலோசனை வழங்குதல்.
- புலம்பெயர்ந்த தமிழர்களிடையே தமிழ் மொழியின் தொன்மை, வளர்ச்சி, கலை, இலக்கண / இலக்கியம், வரலாறு, ஆய்வுரைகள், கட்டுரைகள் வெளியிடுதல்.
- “தமிழ் இணையக்கல்வி கழகத்தின்” மூலம் தமிழ் கற்றல் / கற்பித்தல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தல் மற்றும் புலம்பெயர்ந்த உலகத்தமிழ் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மாநில அரசின் கல்வி துறையில் குறிப்பாக மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்வி பயிலுதலில் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் (நேரடி / தொலைதூர கல்வி) உள்ள வாய்ப்புகள் தொடர்பான அமர்வு.
- “தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்” மூலம் இவ்விழாவில் பங்கேற்கும் சர்வதேச தமிழ் சமூகத்தை, அவர்கள் விரும்பும் நிலையில் சுற்றுலா வசதி ஏற்படுத்தி தருதல்.
- நாட்டுப்புறப் பாடல், செவ்வியல் மற்றும் திரைப்பட பாடல்கள் தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடத்துதல்.
- இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தல்.
- புலம் பெயர்ந்த தமிழர்கள் தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்ள கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திட, “தாய் மண்” என்கின்ற திட்டத்தினை துவக்கி வைத்தல்.
- இப்பெருவிழாவில் நேரடியாக கலந்துகொள்ளவும், இணைய வழியில் கண்டுகளிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
The event is finished.
Date
- Jan 12 - 13 2022
- Expired!
Time
IST- All Day
Local Time
- Timezone: America/New_York
- Date: Jan 11 - 13 2022
- Time: All Day
Event Details
Location
- Virtual

Organizer
-
Commissionerate of Rehabilitation and Welfare of Non Resident Tamils
-
Phone
+914428515288 -
Email
tndiasporaday2022@gmail.com -
Website
https://nrtamils.tn.gov.in/en/