Home Events - Kaniyan Tamil Academy உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை – பாரெங்கும் பாரதி

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை – பாரெங்கும் பாரதி

பாரெங்கும் பாரதி - இணையவழிப் பன்னாட்டுக் கருத்தராங்கம் - கவியரங்கம்

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
 
பாரெங்கும் பாரதி
 
இணையவழிப் பன்னாட்டுக் கருத்தராங்கம் – கவியரங்கம்
 
நாள்: 10.12.2021 – 12.01.2022
 
படைப்புகள் வரவேற்பு
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் உலகத் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து ‘பாரெங்கும் பாரதி’ என்ற தலைப்பில் பாரதியாரின் நினைவுகளைப் போற்றும் இணையவழி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இயங்கலை விரிவரங்கம் (சூம்) செயலி வழியாக 2021 திசம்பர்த் திங்கள் 10ஆம் நாள் தொடங்கும் இந்நிகழ்வுகள் 2022 சனவரித் திங்கள் 12ஆம் நாள் முடிய நடைபெறவுள்ளன.
 
கருத்தரங்கம் (10.12.2021 – 07.01.2022)
 
* பாரதியாரின் வாழ்வும் பணியும்
* பாரதியாரின் கட்டுரைகள்
* பாரதியாரின் இதழியல் பணி
* பாரதியாரின் கவிதைகள்
* பாரதியாரின் கதைகள்/கடிதங்கள் 
* பாரதியாரின் நாட்டுப்பற்று
 
கருத்தரங்கத்திற்கு உலகத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராகப் பதிவு செய்யப்பட்டுள்ள தமிழ் அமைப்பினரிடமிருந்து கருத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
இப்பொருண்மையின்கீழ் கட்டுரைகள் அமைதல் வேண்டும். நிகழ்வில் பங்கேற்க 06.12.2021ஆம் நாளுக்குள் பதிவு செய்தல் அவசியம்.
 
கருத்தரங்கப் பதிவுப்படிவம் : https://tinyurl.com/2hfwabzk
 
கவியரங்கம் (10.01.2022 – 11.01.2022)
 
* ‘பாரதி – 100′ – கவிதைச் சங்கமம்
 
100 கவிஞர்கள் பங்கேற்கவிருக்கும் இந்நிகழ்வில் பாரதியின் சிறப்பைப் போற்றும் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன. கவிதைகள் 24 வரிகளில் மரபுக்கவிதையாகவோ, புதுக்கவிதையாகவோ அமையலாம்.
தெரிவு செய்யப்படும் தரமான கவிதைகளை வாசிக்க இந்நிகழ்வில் கவிஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். பதிவு செய்து முறையாக அனுப்பப்படும் கவிதைகளே கருதிப்பார்க்கப்படும். கவிதைகளை ஒருங்குறியில் (யுனிகோடு) தட்டச்சு செய்து சொல் கோப்பு வடிவில் (வேர்டு) கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு 10.12.2021ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும்.
 
கவியரங்கப் பதிவுப்படிவம் : https://tinyurl.com/4ra3zfeh
 
மேலதிக விவரங்களுக்கு…
மின்னஞ்சல்: utsmdu.research@gmail.com
தொலைபேசி: 0452-2530766 / 0452-2530799
 
முனைவர் தா.லலிதா
இயக்குநர், உலகத்தமிழ்ச் சங்கம், மதுரை

Hourly Schedule

டிசம்பர் 10, 2021 முதல் ஜனவரி 7, 2022 முடிய

கருத்தரங்கம்
பதிவுப்படிவம் : https://tinyurl.com/2hfwabzk

ஜனவரி 10, 2022 மற்றும் ஜனவரி 11, 2022

கவியரங்கம்
பதிவுப்படிவம்: https://tinyurl.com/4ra3zfeh

Date

Dec 10 2021 - Jan 12 2022
Expired!

Time

IST
8:00 am - 6:00 pm

Local Time

  • Timezone: America/New_York
  • Date: Dec 09 2021 - Jan 12 2022
  • Time: 9:30 pm - 7:30 am

Event Details

Read More

Location

Virtual

Organizer

UTS - உலகத் தமிழ்ச் சங்கம் - மதுரை
UTS - உலகத் தமிழ்ச் சங்கம் - மதுரை
Phone
+91-452-2530799
Email
utsmdu1@gmail.com
Website
http://utsmdu.org/
Scroll to Top